விஷாலுக்காவது லட்சியம் இருக்கு.. ஆர்யாவுக்கு என்னப்பா இருக்கு..?


பாலிவுட்டில் சல்மான்கானை போல தமிழிலும் இன்னும் ஒன்றிரண்டு ஹீரோக்கள் திருமண வாழ்க்கையில் நுழையாமல் பொலி காளைகளாக சுற்றி வருகின்றனர். அதில் முக்கியமானவர்கள் விஷாலும் ஆர்யாவும் தான். இதில் இரண்டு பேருமே அதோ அந்த நடிகையை திருமணம் செய்யப்போகிறார்கள்.. இந்த நடிகையை திருமணம் செய்ய போகிறார்கள் என இப்போதுவரை கிசுகிசு வலம்வந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் விவசால் வரலட்சுமியைத்தான் காதலிக்கிறார் என அதிகாரப்போர்வமான வதந்தி இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது..

விஷாலும் அதை மறுக்கவும் இல்லை.. அதேசமயம் நடிகர்சங்க கட்டடம் கட்டிமுடித்துவிட்டு அந்த கட்டடத்தில் அமையவுள்ள திருமண மண்டபத்தில் தான் திருமாகினம் நடக்கும் என கூறிவிட்டார். சரி அவருக்கென இந்த லட்ச்சியம் இருக்கிறது அதனால் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்.. ஆனால் ஆர்யாவுக்கு என்ன வந்தது.. சமீபத்தில் கூட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்சசியில் அவரை திருமணம் செய்துகொள்ள ஒரு போட்டியே நடந்தது. ஆளாவது திருமணம் செய்துகொள்வார் என பார்த்தால், அதிலும் எஸ்கிப் ஆகிவிட்டார் மனிதர்.

இப்போது இன்னொரு அதிர்சசியாக தனது தம்பியும் அமரகாவியம் பட ஹீரோவுமான சதாயாவின் திருமணத்தை முடித்துவைத்து விட்டார் ஆர்யா. அப்பா நீங்கள்லாம் எப்பத்தான் திருமணம் செய்வீங்க பிரதர்..?

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *