எதுக்கெல்லாம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புறாய்ங்க..? ; கொதிக்கும் கருப்பன் டீம்..!


அடாடா.. இந்த கலாச்சார காவலர்களின் ரவுசு நாளுக்கு நாள் தாங்கமுடியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.. ஒருபக்கம் கலாச்சாரம், பண்பாடு இவற்றை சீரழிக்கிறார்கள் என சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு, போராட்டம் என வேலைவெட்டி இல்லாத கூலிக்கு மாரடிக்கும் கும்பல் பல செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இன்னொரு பக்கம் இன்னொருவிதமான கேவலமான கும்பல் ஒன்று கிளம்பியுள்ளதையும் பார்க்க முடிகிறது. கருப்பன்’ படத்திற்கு வழக்கு போட்டுள்ள கும்பலும் அப்படிப்பட்ட ஒன்றுதான் என்பது அவர்கள் செயலிலேயே தெரிகிறது.. அப்படி என்ன செய்தார்கள்..?

இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படம் ‘கருப்பன்’. கிஷோர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

இந்நிலையில், ”காளை பெயருக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில், ‘கருப்பன்’ படம் எடுத்துள்ளதாக கூறி இந்தப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, படத்தின் இயக்குநர் பன்னீர் செல்வம் மற்றும் தயாரிப்பாளருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவை செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அடேய்ய்.. காளைக்கு கருப்பன்னு பெயர் வச்சதுல என்னடா அவமதிப்பு வந்துடப்போகுது..? உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையாடா என கொந்தளித்தாலும், இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராகியுள்ளது ‘கருப்பன் டீம்’..