கன்னிமாடம் பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அப்டேட் அப்டேட்!


கடந்த மாதம் வெளியான கன்னிமாடம் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அவதாரம் எடுத்தார். சாதி மற்றும் ஆணவப்படுகொலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்திரைப்படம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூவ் ஆன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் உரியடி பட இயக்குனர் விஜயகுமார் நாயகனாக நடிக்க உள்ளார். பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தோடு இப்படம் உருவாக உள்ளது

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *