‘மோகினி’ மூலம் இசையால் மிரட்டிய இசையமைப்பாளர் அருள் தேவ்!

ஆர்.மாதேஷ் இயக்கத்தில், திரிஷா நடிப்பில் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘மோகினி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும், இப்படத்தின் பின்னணி இசை ரொம்பவே கவனிக்கும்படியாக இருக்கிறது.

பேய் படத்தையே வித்தியாசமான களத்தில் சொல்லப்பட்டிருப்பது போல, இப்படத்தின் பின்னணி இசையும் வித்தியாசமான முறையில் இருப்பதால், படத்தை பார்க்கும் அனைவரும் பின்னணி இசையை பாராட்ட தவறுவதில்லை.

சொல்ல போனால் ஒரு பக்கம் திரிஷா மோகினியாக மிரட்டுவதோடு, பின்னணி இசை கூடுதலாகவேநம்மை மிரட்டுகிறது. இந்த மிரட்டலுக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் அருள் தேவ்.

கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த ‘போட்டா போட்டி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அருள் தேவ், தொடர்ந்து ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’, ‘பூவரசம் பீப்பி’, ‘கத்துக்குட்டி’, ‘பாக்கணும் போல இருக்கு’, ‘நகர்புரம்’ என்று அனைவராலும் பாராட்டப்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

கதைக்கு ஏற்ற பாடல்கள், கமர்ஷியலான பாடல்கள் என்று இயக்குநர்களின் இசையமைப்பாளராக விளங்கும் அருள் தேவின் இசையமைப்பில் வெளியான ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் பாடல்களாக அமைந்தது. தமிழகத்தில் மட்டும் இன்றி, மலேசியா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இவரது பாடல்கள் செம ஹிட்டானது.

இந்த நிலையில், திரிஷாவின் ‘மோகினி’ படத்திற்கு அருள் தேவ் அமைத்த பின்னணி இசை அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. மோகினி, வைஷ்ணவி என இரண்டு திரிஷாக்களின் வித்தியாசங்களை தனது பின்னணி இசை மூலம் ரொம்பவே அறுமையாக காட்டியிருக்கும் அருள் தேவ், படத்தில் இயக்குநர் கையாண்ட கலாச்சார விஷயங்களை தனது இசை மூலம் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

திகில் படம் என்றாலே பின்னணி இசைக்கு அதிகமான வேலை இருக்கும். அதனை ரொம்ப நன்றாகவே புரிந்து பணியாற்றியிருக்கும் அருள் தேவ், படத்தின் ஒரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு தனது இசை திறமையை பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் ‘மோகினி’ மூலம் அருள் தேவ் கோலிவுட்டில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருவது உறுதி.

தமிழ், தெலுங்கு, மலையாலம் என்று பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அருள் தேவ், வித்தியாசாகரிடம் பணிபுரியும் போதே இயக்குநர் மாதேஷுடன் பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவரது திறமையை பார்த்த மாதேஷ், தற்போது அவருக்கு ‘மோகினி’ படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

மாதேஷின் வாய்ப்பை ரொம்ப கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் அருள் தேவின் பின்னணி இசையை ‘மோகினி’ படக்குழு மட்டும் இன்றி படம் பார்க்கும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *