ஒத்த இன்டர்வியூவில் மொத்தமும் காலி ; சோஷியல் மீடியாவில் டேமேஜ் ஆன அஜித்தின் பெயர்

அஜித் யார் வம்புக்கும் போகமாட்டார்.. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்.. மீடியாக்களில் பேட்டி கூட தரமாட்டார்.. அவ்வளவு ஏன் தனது படத்தின் நிகழ்ச்சிகளுக்கு கூட வரமாட்டார் என அவரை பற்றி மீடியாக்கள் ரசிகர்களிடம் பல வருடங்களாக மிகப்பெரிய பில்டப்பை ஏற்றி வந்துள்ளன. அவை அத்தனையையும் ஒரே போட்டியில் டோட்டலாக டேமேஜ் பண்ணிவிட்டார் மூத்த தயாரிப்பாளரான செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், அஜீத் குறித்து ஒரு விஷயம் கூறியுள்ளார். அதாவது அஜீத் தனது தேவைக்காக ஒருமுறை ஆறு லட்ச ரூபாயை மாணிக்கம் நாராயணனிடமிருந்து வாங்கினாராம். ஆனால் அந்தப்பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்த அஜீத், அதற்கு பதிலாக உங்களுக்கு ஒரு படம் நடித்து தருகிறேன், அதற்கான அட்வான்ஸ் ஆக இருக்கட்டும் என கூறினாராம்.

இப்படியே சுமார் பதினெட்டு லட்ச ரூபாயை மாணிக்கம் நாராயணனிடமிருந்து வாங்கியுள்ளார் அஜீத். அதற்கான ஆதாரம் எல்லாம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ள மாணிக்கம் நாராயணன், இன்றுவரை அஜீத் அதுபற்றி மூச்சுவிடவே இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் அஜீத்தை வெறித்தனமாக நேசிக்கும் அவரது ரசிகர்களிடம் சற்று சலசலப்பை ஏற்படுத்தவே செய்துள்ளது.