காலா ; விமர்சனம்


ஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது பர்க்கலாம்.

மும்பை தாராவி பகுதி மக்களின் காட்பாதர் தான் காலா என்கிற கரிகாலன் என்கிற ரஜினி. தாராவியை ஹைடெக்காக மாற்றுகிறேன் என அந்த தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கோடிக்கணக்கில் மதிப்புள்ள அந்த இடத்தை ஆக்கிரமிக்க பார்க்கிறார் ஹரிதாதா என்கிற நானா படேகர். இதை ரஜினி கடுமையாக எதிர்க்க, ரஜினி தரப்பிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறார் நானா படேகர்… அதையும் மீறி அவரிடமிருந்து காலா தாராவியை காப்பாற்றினாரா என்பது க்ளைமாக்ஸ்.

தன்னை நம்பிய மக்களுக்காக போராடும் காலா கேரக்டரில் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் ரஜினி செமையாக பிட் ஆகிறார்.. மனைவி ஈஸ்வரியுடன் குறும்பு செய்வது, முன்னாள் காதலி ஹுமாவுடன் போகிற போக்கில் தலைதூக்கும் ரொமான்ஸ், நானா படேகருக்கு சவால் விடுவது என நடிப்பில் நம்மை திருப்திப்படுத்தி விடுகிறார் ரஜினி.. அதிலும் நானா படேகரை பார்த்து ‘நான் உன்னை போக சொல்லலையே ” என் என ஆட்டம் காட்டுவது செம மாஸ் சீன..

பல வருடங்கள் கழித்து ரஜினியின் ஜோடியாக வெள்ளித்திரைக்கு ரிட்டர்ன் ஆகியிருக்கும் ஈஸ்வரி ராவ் ரஜினிக்கு ஈடு கொடுத்து செமையாக ஸ்கோர் பண்ணுகிறார், ஹுமா குரோஷியும் தனது தேர்வை நியாயப்படுத்தி இருக்கிறார்.. ரஜினிக்கு பக்கபலமாக எந்நேரமும் போதையில் ஆடிக்கொண்டே சலம்பும் சமுத்திரக்கனி காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார். ரஜினியின் மகனாக வத்திக்குச்சி திலீபன் மற்றும் இன்னொரு மகன் லெனினாக நடித்திருப்பவர் இருவருக்கும் வாய்ப்பு அதிகம்.. சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ரமேஷ் திலக், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், சம்பத், சாயாஜி ஷிண்டே, ரவி காளே என எல்லோருமே கவனிக்க வைக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களை விட பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளது.. மும்பை தாராவியின் அவலங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது முரளியின் ஒளிப்பதிவு. ரஜினியின் நடிப்பு பசிக்கு தீனி போட்டு இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு இயக்குனர் ரஞ்சித் சரியான தீனி போடவில்லை என்றே சொல்லவேண்டும்.படத்தில் நமக்கு நிறைய கேள்விகளை வைத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித்.. காலாவின் தந்தை வேங்கையனை ஹரிதாதா கொன்றான் என்றால் இத்தனை வருடங்களாக காலா அவனை பழிவாங்காமல் இருந்தது ஏன்..? வேங்கையன் மகன் தான் காலா என்பதும் தாராவியில் ராஜாவாக காலா இருக்கிறார் என்பதும் ஹரிதாதாவுக்கு தெரியாமல் போனது எப்படி..? இப்படி நிறைய சந்தேகங்கள் எழுந்தாலும் ரஜினி படத்தில் இந்த கேள்விகள் எல்லாம் எதற்கு என ஒதுக்கிவிட்டு வெளியே வருகிறோம்..

காலாவும் ரஞ்சித் படம் தான்.. ரஜினி படமல்ல..