சிந்துச்சமவெளி நாகரிகம் தெரிந்தவருக்கு திருட்டுப்பயலை சமாளிப்பதா கஷ்டம்..?

திருட்டுப்பயலே படத்தை அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. ரசிகர்கள் பலருக்கும் பலவித கோணங்களில் அந்தப்படத்தை பிடித்திருக்கும். சிலருக்கு கதாநாயகனே வில்லன்போல மாறி ஏமாற்றி பணம் பறிப்பது பிடித்திருக்கும்.. ஆனால் இன்னும் சிலருக்கோ அதில் கில்மா நாயகியாக நடித்த மாளவிகாவை பிடித்திருக்கும்.

இப்போது திருட்டுப்பயலே படத்தின் பார்ட்-2வை எடுக்க போகிறார் சுசி கணேசன். இந்தப்படத்திலும் அதேபோல் கில்மா நாயகியாக ஒருத்தரை தேடியவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தார் அமலாபால்… ஆம்.. படத்தின் கதையாய் கேட்டு தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்பதால் ஒப்புக்கொண்டாராம்.

இதே கேரக்டரை அவர் விவாகரத்து செய்யாமல் இருந்திருந்தால் அவர் ஒப்புக்கொண்டிருப்பாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள்.. சிந்துச்சமவெளியில் படத்தில் மாமனாரை மெச்சிய மருமகள் கேரக்டரில் புகுந்து விளையாடியவருக்கு, இந்த கேரக்டரெல்லாம் ஜுஜூபி என்கிறார்கள்..