“ஏண்டா இந்த வேலையை பண்ணினோம்” ; எஸ்.வி.சேகரை கதறவைத்த நீதிமன்றம்..!


சில் வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது. ஆனால் ஆளுநருக்கு ஆதரவாகவும், பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தியும் ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனு இன்று நடைபெற்ற விசாரணையில் எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இப்படி ஒரு அவதூறான பதிவை பகிர்ந்துவிட்டு, கவனிக்காமல் பகிர்ந்துவிட்டேன் என வருத்தம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எஸ்.வி.சேகர் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை என்றும் நீதிமன்றம் கண்டித்தும் உள்ளது.

இதை தொடர்ந்து, எந்த நேரத்திலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்.ராஜா போல தன்னையும் நினஈத்துக்கொண்டு இப்படி மதிகெட்ட செயலில் இறங்கிய எஸ்.வி.சேகரை “ஏண்டா இந்த வேலையை பண்ணினோம்” என கதறவைத்துவிட்டது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு.