கமலின் மீது வருத்தத்தில் இருக்கும் லைகா..!


எவ்வளவு பெரிய பணக்கார நிறுவனமாக இருந்தாலும் ஒரே நேரத்தில் தொடர்ந்து பல படங்களை அதுவும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும்போது தடுமாறத்தான் செய்யும். லைகா நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல.. அந்தவகையில் 2.O படத்தில் மிகப்பெரிய அளவு பணத்தை கொட்டியுள்ள லைகா, கமலின் சபாஷ் நாயுடு படத்தையும் தயாரித்து வருகிறது.

ஆனால் கமலோ சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பை கொஞ்ச நாட்கள் நடத்திவிட்டு அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். இப்போது அவரது கவனம் எல்லாம் ஷங்கருடன் சேர்ந்து பண்ணப்போகும் இந்தியன்-2 பக்கம் தான் இருக்கிறது. சபாஷ் நாயுடு படத்தை முடித்துக்கொடுத்துவிட்டால் தங்களுக்கு ரிலீப் ஆக இருக்கும் என நினைக்கிறதாம் லைகா.