வேண்டுமென்றே சின்மயியை பழிவாங்குகிறாரா ராதாரவி..?


கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மீ டூ சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர் பின்னணி பாடகி சின்மயி. இடையில் ராதாரவி மீது இதேபோல ஒருவர் குற்றச்சாட்டு கூறியதாக தகவல்கள் செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார் சின்மயி. டப்பிங் யூனியன் செயலாளராக உள்ள ராதாரவிக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தியது

அதைத் தொடர்ந்து டப்பிங் யூனியனிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் சின்மயி. இந்த நிலையில் சின்மயி மீண்டும் சங்கத்தில் சேர வேண்டுமென்றால் ஒன்றரை லட்சம் ரூபாய் டெபாசிட் கட்டுவதுடன். மன்னிப்பு கடிதமும் வழங்க வேண்டும் என கூறப்பட்டதாம்

இது குறித்து கூறியுள்ள சின்மயி 2006-ஆம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் ஈட்டியது.. ஆனால் ஓரிரு படங்கள் டப்பிங் பேசிய நடிகர்கள் எல்லாம் ஆயுட்கால உறுப்பினராக இருக்கிறார்கள்.. 2006 முதல் டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருக்கும் என்னை விலக்கிவிட்டு, இப்போது புதிய உறுப்பினராக சேர்கிறார்களாம்.. அதற்கு நான் 2500 ரூபாய்க்கு பதில் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டுமாம்.

இது என்ன கணக்கு என்று தெரியவில்லை. மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.. அது எதற்காக என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி. அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது ராதாரவி சின்மயி மீதான தனது பழிவாங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.