நடிகர்களில் கமல் கட்சி ஆரம்பித்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் போகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை பொருத்தவரை கட்சி ஆரம்பிப்பது உறுதி என கூறிவிட்டார். அதற்கான பணிகள் நடக்கின்றன. சட்டசபை தேர்தலில் தனது இலக்கு மிக தெளிவாகவும் சொல்லிவிட்டார். இந்த கேப்பில் நடிகர் விஜய்யும் அரசியலுக்குள் நுழைவதற்கான சில சமிக்ஞைகளை அவ்வப்போது பொதுவெளியிலும் தனது படங்களின் மூலமாகவும் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர் மன்றமே வேண்டாம் என இருந்த மன்றத்தையும் கலைத்துவிட்டு தானுண்டு தன் படமுண்டு என அமைதியாக இருக்கும் அஜித்தை, அவரது ரசிகர்களே அரசியலுக்கு அழைக்காத நிலையில் இயக்குனர் சுசீந்திரன் என்ன காரணத்தினாலோ, “தல நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்.. 40 ஆண்டு காலமாக இருக்கும் திராவிட அரசியலை மாற்றிவிட்டு ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும்” என உசுப்பேத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
அஜித் படத்தை இயக்க வாய்ப்பு கேட்பதென்றால் அதை நேரடியாக கேட்டு விடலாமே, அதற்காக இப்படி ஒரு அறிக்கையா..? இது என்ன அக்கப்போர் என திரையுலகினரே நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்