மாயோன் ; திரை விமர்சனம்


புதையல், தொல்லியல் ஆராய்ச்சி, கோயில் இவற்றின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தை கொடுக்க முயற்ச்சித்துள்ளார் இயக்குனர் கிஷோர்.

மாயோன் மலை பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. இதற்கு தலைமை வகிக்கிறார். அவருக்கு கீழ் வேலை பார்க்கும் சிபிராஜ், ஹரிஷ் பெராடி இருவரும் சேர்ந்து அந்த கோவிலில் உள்ள ரகசிய அறையில் இருக்கும் புதையலை எடுத்து வெளிநாட்டுக்கு கடத்த நினைக்கிறார்கள்.

ஆனால் அந்த புதையல் அரை எங்கு உள்ளது என சிபிராஜ் கண்டுபிடிக்க முயல்கிறார். அவருடன் சேர்ந்து தன்யா ரவிசந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். அவர்களால் அந்த அறையை கண்டுபிடிக்க முடிந்தததா இல்லையா என்பதுதான் மாயோன் படத்தின் மீதிக்கதை.

கிருஷ்ணர் கோவில், மாயோன் மலை இவற்றை சுற்றி தான் படம் நகர்கிறது. இருந்தாலும் அதை மிக சுவாரஸ்யமாக, விறுவிறுப்புடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷோர்.

தொல்லியல் துறை அதிகாரியாக வரும் சிபிராஜ் கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கடைசியில் அவரது கதாப்பாத்திரத்தில் வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காத ஒன்று.

கதாநாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன், முக்கிய கதாப்பாத்திரத்தில் ஹரிஷ் பெராடி, கே.எஸ்.ரவிகுமார் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். எது செட் எது நிஜக் கோவில் என தெரியாத அளவுக்கு உழைத்திருக்கிறார் கலி இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத் வித விதமான கோணங்களில் கோவிலை காட்டியுள்ளார்.

மொத்தத்தில் மாயோன் ஒரு மாய உலகத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.