வெவ்வேறு துறைகளை சேர்ந்த, வெவ்வேறு பிரச்சனைகள் கொண்ட ஆறு பேர், தங்களின் பிரச்சனைகளில் இருந்து தற்காலிகமாக விடைபெறுவதற்காக பயணம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இவர்களின் பயணம் தான் பேப்பர் ராக்கெட்.
அப்பாவின் இழப்பைத் தாங்கவியலாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது.
இவர்களின் பயணம் எங்கே, பயனத்தி என்னவெல்லாம் நடக்கிறது என்பதை காட்டும் ஒரு பீல் குட் வெப் சீரியஸ் தான் பேப்பர் ராக்கெட்.
காளிதாஸ் ஜெயராம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இதில் அவருக்கு நல்ல வேடம் அதில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
தான்யா ரவிச்சந்திரனுக்கு வரும் அதீத கோபம்தான் நோயே. அதற்கேற்ற நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
ரேணுகாவின் கதாபாத்திரம் கொடுமையானது, கெளரி கிஷனின் சிக்கல் கொடூரமானது, நிர்மல் பாலாழியின் பாத்திரமும் ஏற்றுகொள்ளவியலாதது. ஆனால் அவருடைய கதாப்பாத்திரம் நம்மை ரசிக்க வைக்கிறது. கருணாகரன் கதாபாத்திரம் வித்தியாசமானது. அன்றாட வாழ்வின் எந்தச் சிக்கலும் இல்லாத அவருக்கு எல்லாமே சிக்கல்தான். அவருடைய நடிப்பு அவரது கதாப்பாத்திரத்தை ரசிக்க வைக்கிறது.
காளிவெங்கட், சின்னி ஜெயந்த், ஜிஎம்,குமார், அபிஷேக், பிரியதர்ஷினி உட்பட ஏராளமானோர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு நல்லதைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு தொடருக்கு கூடுதல் பலம். சைமன் கே கிங், தரன்குமார், வேத்சங்கர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
மனித உணர்வுகளுக்குள் பயணப்பட்டு கிருத்திகா இந்த தொடரை எழுதி இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் இந்த பேப்பர் ராக்கெட் தொடர் ஒரு பீல் குட் தொடர் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அன்பு, பாசம், காதல் என நம்மை நெகிழ வைத்திருக்கிறது.