ஜோதி ; திரை விமர்சனம்

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் குழந்தை கடத்தலை மையமாக வைத்து பல படங்கள் வந்து கொண்டிருகின்றன. அந்த வரிசையில் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவது குறித்த அழுத்தமான ஒன்லைன் தான் ‘ஜோதி’.

வீட்டில் தனியாக இருக்கும் நிறைமாத கர்ப்பிணி ஷீலா வயிற்றை அறுத்து சிசுவை கடத்தி செல்கின்றனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிய காவல்துறை இறங்குகிறது. யார் அந்த குற்றவாளி, எதற்கு இந்த குற்றம், இதன் பின்னணி என்ன என்பதுதான் மீதிக் கதை.

ஜீவி, 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். கான்ஸ்டபிளாக வரும் இளங்கோ குமாரவேல், கர்ப்பிணி பெண்ணாக வரும் ஷீலா என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.

பச்சிளம் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த முக்கியமான ஒன்லைனை எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பரமாத்மா.

இந்தியாவில் ஆண்டுக்கு 40,000 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் என்பதையும், அதில் 11,000 குழந்தைகள் மீட்கப்படுவதில்லை என்ற கணக்கும் படத்தின் இறுதியில் வெறும் எழுத்துகளாக சொல்லப்படுகிறது.

ஹர்ஷவர்த்தனின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் ஒரு அருமையான த்ரில்லர் படம் இந்த ஜோதி.