கேப்டன் ; திரை விமர்சனம்

காட்டுக்குள் இருக்கும் வினோத உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான யுத்தம் தான் கேப்டன் படத்தின் ஒன்லைன்.

சிக்கிமில் இருக்கம் செக்டார் 42 வனப்பகுதி, 50 வருடங்களாக மனித நடமாட்டமே இல்லாத இடம். அதை மனிதர்கள் உலவ பாதுக்காப்பான பகுதியாக மாற்றி, ஒரு பேக்டரியை இயக்க நினைக்கிறது அரசு. அதற்காக அங்கு அனுப்பப்பட்ட இராணுவ குழு திரும்ப வரவில்லை. அடுத்ததாக கேப்டன் ஆர்யாவின் குழு அனுப்பப்படுகின்றனர். அங்கு செல்லும் ராணுவ குழுவே மர்மமான ஒரு தாக்குதலை நடத்துகின்றனர். அந்த குழுவில் இருக்கும் ஹரீஷ் உத்தமனே எல்லாரையும் திடீரென சுட்டுத் தள்ள ஆரம்பிக்கிறார். பின்பு தன்னை தானே சுட்டுக் கொண்டு இறக்கிறார்.

அங்கு என்ன நடந்தது? எதற்காக ஹரீஷ் அவரை அவரே சுட்டுக் கொன்றார் என எதுவும் தெரியாமல் திரும்புகிறது குழு. மீண்டும் ஒரு வருடத்திற்கு பிறகு ஆர்யாவின் குழுவை ஆராய்ச்சிக்காக அதே இடத்துக்கு அழைத்து செல்கிறார் ஆராய்ச்சியாளர் சிம்ரன். அந்த காட்டுக்குள் என்ன இருக்கிறது ? அது ஏன் இவர்களை தாக்குகிறது? அதை ஆர்யாவின் குழு சமாளித்தனரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாணயம், மிருதன், டிக்டிக்டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ஏலியன், பிரிட்டேட்டர் கலந்து ஒரு கதையை இயக்கியுள்ளார். படத்தின் கதையை மிக எளிமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆர்யா எப்போதும் போல் பிரமாதமாக நடித்திருக்கிறார். சிம்ரன், ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், கோகுல் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

யுவாவின் ஒளிப்பதிவும், இமானின் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ஆர்யாவின் கேப்டன் கரை சேருவது கஷ்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *