காபி வித் காதல் ; விமர்சனம்

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி 4 பேரும் சகோதர, சகோதரிகள். இதில் ஜெய்யை ஒரு தலையாக அமிர்தா காதலிக்கிறார். ஜெய்க்கோ பெரிய ஹோட்டல் அதிபராக வேண்டும் என்று ஒரு இடத்தை பார்க்கிறார், அந்த இடத்தின் உரிமையாளர் மகளை ஹோட்டல் கனவிற்காக ஓகே சொல்கிறார். அந்த பெண் அமெரிக்காவில் உள்ளார்.

அவர் அமெரிக்காவிலிருந்து வந்த போது ஜெய்க்கு பதிலாக ஜீவா பிக்கப் செய்ய போக, இவர்களுக்குள் காதல் பற்றிவிடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் தன் தம்பியின் கனவிற்காக தன் காதலை மறைத்து விடுகிறார். இதற்கு முன் ஜீவாவின் முன்னாள் காதலி ஐஸ்வர்யா தத்தா அவரை ஏமாற்றி விட, பெற்றோர் சொல்லும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறார், அவர் தான் ரைஸா வில்சன்.

ஆனால், ரைஸாவிடம் கொஞ்சம் அப்படி இப்படி முன்பே இருந்தவர் மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த். இப்போது யார் யாரை திருமணம் செய்தார்கள், யார் யாரை பிரிந்தார்கள் என்பதே மீதிக்கதை.
இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை எப்படி நீட்டாக கொடுக்க முடியுமோ, கொடுக்க முயற்சித்து இருக்கிறார் சுந்தர். சி.

சுந்தர். சி இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர், அவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை அழகாக செய்துள்ளனர். டிடி இந்த படத்தில் ஒரு நடிகையாக ஸ்கோர் செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பிளஸ்.

சுந்தர் சி எப்போதும் ஒரு குழப்பமான கதையை கையில் எடுத்து அதில் செம காமெடி காட்சிகளை புகுத்தி ஜாலியாக கொண்டு செல்வார். ஆனால், மிக மிக குழப்பான கதையை கையில் எடுத்துக்கொண்டு காமெடியை கம்மி செய்து பீல் குட் மூவியாக கொடுத்துள்ளார்.

இப்படியொரு கலாட்டாவான படத்தில் வழக்கம் போல சுந்தர். சி காமெடியிலும் புகுந்து விளையாடி இருந்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும். யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி வெட்டிங் பிளானர்களாக வந்தாலும், அவர்களின் காமெடி டிராக் பெரிதாக ஒட்டவில்லை. முதல் பாதியில் இருந்த அளவுக்கு இரண்டாம் பாதியில் எந்தவொரு ட்விஸ்ட்டும் இல்லாமல் படம் ரொம்பவே சோதிக்கிறது.

மொத்தத்தில் காபி வித் காதல் பார்க்கலாம்.