கட்டா குஸ்தி ; விமர்சனம்

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, முனிஷ்காந்த், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் கட்டா குஸ்தி. குஸ்தி சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில் சிறு வயதிலேயே விஷ்ணு விஷாலின் அப்பா, அம்மா இறந்து விடுகிறார்கள். விஷ்ணு விஷாலுக்கு ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் கருணாஸ் உடன் நட்பு ஏற்படுகிறது. இருக்கும் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை தான் உலகம் என்று வாழ்கிறார். அது மட்டும் இல்லாமல் பெண் என்பவள் ஆணுக்கு கீழ்தான். ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு இருப்பவர் கருணாஸ். அதை விஷ்ணு விஷாலுக்கும் புகுத்துகிறார்.

இதனால் விஷ்ணு விஷால் தனக்கு வரும் பெண் அதிகமாக படித்திருக்கக் கூடாது, முடி நீளமாக இருக்க வேண்டும் என்று பல கண்டிஷன்கள் போடுகிறார். இந்த கண்டிஷனோடு பல விஷாலுக்கு பெண் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் கட்டா குஸ்தி விளையாட்டில் திறமை வாய்ந்தவராக இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் கட்டா குஸ்தி போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றிருக்கிறார். இதனால் இவருக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் கிடைக்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் தான் ஐஸ்வர்யாவின் சித்தப்பாக வரும் முனிஸ்காந்த் சில பொய்களை சொல்லி விஷ்ணு விஷாலுக்கு ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், முனிஸ்காந்த் திருமணம் பொய்கள் எல்லாம் விஷ்ணுக்கு தெரிய வருகிறது. அதற்குப்பின் என்ன நடக்கிறது? ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டா குஸ்தி கனவு ஜெயித்ததா? இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா? என்பதே தான் படத்தின் மீதி கதை.

படத்தில் வீரா என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். எஃப் ஐ ஆர் படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷாலுக்கு நல்ல ஒரு படமாக கட்டா குஸ்தி அமைந்திருக்கிறது. படத்தில் சொகுசாக, தெனாவட்டாக சுற்றி தெரியும் வாலிபனாக இருக்கிறார் விஷ்ணு.

படத்தில் பெயருக்கு தான் விஷ்ணு விஷால் கதாநாயகன். ஆனால், உண்மையிலேயே படத்தின் கதாநாயகன் என்று பார்த்தால் கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி தான். இந்த படத்தில் ஐஸ்வர்யா ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். முதல் பாதையில் குடும்பம் சொன்ன பொய்யை மறைக்க ஐஸ்வர்யா லட்சுமி செய்யும் தில்லாலங்கடி வேலை எல்லாம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பின் ரவுடிகளை பொளந்து கட்டும் காட்சிகள் எல்லாம் திரையரங்களில் கிளாப்ஸ்களை அள்ளுகிறார். இரண்டாம் பாதியில் தன்னுடைய, சுயமரியாதைக்கு ஏற்படும் இழுக்கு, கணவனுக்கு எதிராக போட்டியிடுவது போன்ற எல்லா காட்சிகளிலுமே ஐஸ்வர்யா லட்சுமி தூள் கிளப்பி இருக்கிறார். பெண்களை அடிமைகளாக நினைக்கும் எண்ணத்தை மாற்ற முயற்சிக்கிறார்.

விஷ்ணு விஷாலின் மாமாவாக வரும் கருணாஸ் இந்த படத்தில் மனைவியை அடக்கி ஆளும் ஆணாதிக்கவாதியாகவே நடித்துள்ளார். அவர் கொடுக்கும் குருட்டுத் தனமான யோசனைகளை கேட்டு, கபடி பிளேயரான விஷ்ணு விஷால் மனைவியை ஜெயிக்க வேண்டும் என நினைத்து கட்டா குஸ்தி கற்றுக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் காமெடி ரகளை.

முனிஷ்காந்த், ரெடின் கிங்க்ஸ்லீ, கருணாஸ் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்டாகவும் கணவன், மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு சிக்கல்களையும் அழகாக கையாண்டுள்ளது படத்திற்கு பெரிய பலமாக மாறி உள்ளது.

ஸ்போர்ட்ஸ் விளையாடும் பெண்கள் எதிராளியை ஜெயிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தையும் புருஷனையும் ஜெயிக்க வேண்டி இருக்கு என்கிற வலிமையான கருத்தை காமெடி கலந்து இயக்குநர் செல்லா அய்யாவு கமர்ஷியல் மசாலா தூவி கொடுத்துள்ள படம் தான் கட்டா குஸ்தி.

குடும்பத்துடன் ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.