கோஸ்டி ; விமர்சனம்

குலேபகாவலி, ஜாக்பாட், காத்தாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு, ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கோஸ்டி.

காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் காஜல் அகவர்வால், ஜெயிலில் இருந்து தப்பியோடிய மிகப்பெரும் தாதாவான கே எஸ் ரவிக்குமாரை தேடி அலைகிறார். தன்னை ஜெயிலில் தள்ளிய 5 ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை கொல்வதற்கு செல்கிறார் கே எஸ் ரவிக்குமார். இந்த சூழலில் திருடர்களாக வரும் யோகிபாபு, ஜெகன் மற்றும் கிங்க்ஸ்லி மூவரும் விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்த ஒரு வாயுவை சுவாசிக்க.. மூவரும் மனநலம் பாதிக்கப்படுகிறார்கள்.

கே எஸ் ரவிக்குமாரை துப்பாக்கியால் சுடுவதற்கு பதிலாக தவறுதலாக ஜெய்யை சுட்டுவிடுகிறார் காஜல் அகர்வால். ஜெய்யின் உடலை மறைத்து வைக்கும் காஜல் அகர்வால், சில அமானுஷ்யத்தால் கஷ்டப்படுகிறார். தொடர்ந்து அமானுஷ்யம் காஜல் அகர்வாலை தொந்தரவு செய்கிறது.

யார் அந்த அமானுஷ்யம்.? ஜெய்யின் கதாபாத்திரம் என்ன..? அமானுஷ்யத்தின் பிடியில் இருந்து காஜல் தப்பித்தாரா.? என்பதே படத்தின் கதை.

காஜல், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, ஜெகன், ஊர்வசி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். லாஜிக்கை மீறி மக்களை சிரிக்க வைப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்தப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். சில இடங்களில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ காமெடி சிரிக்க வைக்கிறது.

மொத்தத்தில் கோஸ்டி பார்க்கலாம்.