கெழப்பய ; விமர்சனம்


டைட்டிலை பார்த்தாலே தெரியும் படத்தின் கதாநாயகன் யார் என்று.. ஆனால் அதற்கேற்ற விஷயமும் உள்ளே இருக்கிறது.

காரில் கர்ப்பிணிப்பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு டவுனுக்கு செல்கிறது. ஒரு கும்பல் அப்போது கிராமத்து சாலை ஒன்றில் காருக்கு முன்னால் சைக்கிளில் செல்லும் பெரியவர் அவர்களுக்கு வழிவிடாமல் மெதுவாக நடுரோட்டில் ஓட்டி செல்கிறார். ஹாரன் அடித்தும் சத்தம் போட்டு சொல்லியும் கூட அவர் நகராததால் இறங்கிச் சென்று அவரை தள்ளிவிட்டு முந்தி செல்ல பார்க்கிறார்கள். ஆனால் பெரியவர் அவர்களை எல்லாம் சமாளித்து அவர்களுக்கு பாதையை விடாமல் அதே இடத்தில் காரை மறித்து நின்றபடி சண்டித்தனம் செய்கிறார்.

இப்போது காரில் வந்தவர்கள் சிலருக்கு போன் போட அதேபோல அந்த பக்கம் வந்த ஊர் நாட்டாமை உள்ளிட்ட ஒரு சிலர் பெரியவர் பக்கம் சேர்ந்து விட எதற்காக பெரியவர் காரை தடுத்து நிறுத்தினார் என்கிற சந்தேகம் வலுக்கிறது. இறுதியில் போலீசும் வந்து விடுகிறது. அதன்பிறகு தான் திடுக்கிடும் உண்மை ஒன்று வெளியே வருகிறது. அது என்ன என்பது கிளைமாக்ஸ்.

தெனாலிராமன் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதில் தெனாலிராமன் கொள்ளைப் புறத்தில் கை கழுவ செல்லும்போது ஒரு திருடனைப் பார்த்து விடுகிறான். அவனைப் பிடிக்க தெனாலிராமனுக்கு பலம் இல்லை. கத்தி ஊரைக் கூட்ட தைரியமும் இல்லை. அதனால் தன் மனைவியிடம் கை கழுவ வாய் கொப்பளிக்க மீண்டும் மீண்டும் தண்ணீரைக் கேட்க மனைவியும் கொடுத்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கணவனுக்கு பித்தம் தலைக்கேறி விட்டது என்று எண்ணி ஊர் மக்களை அழைக்கிறாள். ஊர் மக்கள் வந்தவுடன் திருடன் பிடிபட்டு விடுகிறான் இப்படி ஒரு கதை இருக்கும்.

இதை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் யாழ் குணசேகரன். கதையின் நாயகன் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு வயதான கிழவன் அவரை மையப்படுத்தி கதை திரைக்கதை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். வயதான பாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணகுமார் நம் இந்தியன் தாத்தாவை ஞாபகப்படுத்துகிறார்.

மேலும் பல முகங்களும் புது முகங்களை அவர்கள் நடிப்பை நாம் குறை சொல்ல முடியாது. கதைக்களம் முழுவதும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்து வீதியில் நடைபெறுகிறது குறைந்த முதலீடு என்றாலும் நிறைய சிக்கனத்தை கடைப்பிடித்து இருக்கிறார் இயக்குனர்.

இறுதியில் அந்த காரில் இருக்கும் பொருள் இதுதான் என்று நாம் கூறும் போது அந்த வயதானவரின் போராட்டம் சரிதான் என்று நாம் நினைத்தாலும் இன்னும் சில வலுவான காட்சிகளை சேர்த்து விறுவிறுப்பை கூட்டி இருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது அந்த வகையில் ஒரு புதிய பாணியிலான இந்த கெழப்பய படம் அனைவரையும் ரசிக்க வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இளைஞர்களை வைத்து படம் எடுக்கும்போதே படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வரமாட்டே என்கிறார்கள். அதிலும் ஒரு வயதான தாத்தாவை கதாநாயகனாக வைத்து படம் வந்தால் யார் பார்ப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் தப்புக்கணக்கு தான் என்பதை சொல்லும் படம் தான் இந்த கெழப்பய திரைப்படம்