மிரள் ; விமர்சனம்

பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மிரள். குடும்பப் பின்னணியில் ஹாரர் கலந்து உருவாகியுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட பரத் – வாணி போஜன் இருவரும் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது.
மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இதற்கு பரிகாரம் செய்ய பரத் குடும்பத்துடன் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர். ஆனால் சென்ற முதல் நாளே பரத்திற்கு சில நாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த ஒரு ப்ராஜெக்ட் திடீரென்று கிடைக்கிறது.

இதனால் இரவோடு இரவாக வாணி போஜன் மற்றும் பரத் இருவரும் தங்கள் மகனை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்புகிறார்கள். அப்படி செல்லும் வழியில் நடக்கும் பல எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் விஷயங்களை இருவரும் எப்படி எதிர்கொள்கின்றனர்? வாணி போஜன் கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு ? போன்றவற்றை எல்லாம் ஒரு திரில்லர் பேக்கேஜ் ஆக இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது.

படத்தின் கதை மற்றும் திரைக்கதை மிகவும் தெளிவாக இருக்கிறது. அறிமுக இயக்குனர் சக்திவேல் முதல் படம் அல்லாமல் படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

பரத்தின் நடிப்பு மிக சிறப்பாக இத்தனை ஆண்டு அனுபவம் அவரது நடிப்பில் தெரிகிறது. வாணி போஜன் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளருக்கு நிச்சயம் ஒரு பாராட்டு கொடுக்க வேண்டும். படத்தின் பல திகில் காட்சிகளில் நம்மை பயப்பட வைத்ததற்கு இவரது ஒளிப்பதிவு முக்கிய காரணம்.

படத்தின் முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் டிவிஸ்டுகள் உள்ளது.

மொத்தத்தில் மிரல் – மிரட்டி இருக்கிறது.