ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தை இளவட்டங்கள் பலர் ரசித்து பார்த்தாலும் கூட, சில நேரங்களில் அவர்களே கேட்காவிட்டாலும் கூட, கூசுகின்றது என காதுகளை பொத்திக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறின.. காரணம் ஆங்காங்கே ‘பீப்’ பண்ணப்பட்ட வசனங்களை அள்ளி தெளித்திருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்…
ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் விதமாக ‘பீப்’ பாடலை வெளியிட்டு தமிழக மக்களின் காதுகளை மூட வைத்தவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் எனப்படும் எஸ்.டி.ஆர் எனப்படும் சிலம்பரசன் என்கிற சிம்பு. இப்போ லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த ஆதிக் தான் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப்போகிறாராம். எப்படி பீப்பும் பீப்பும் சரியா ஜோடி சேர்ந்திருக்காங்க பாருங்கன்னு நெட்டிசன்கள் இப்பவே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க… அனிருத்தையும் கூட்டு சேர்த்துக்குங்கப்பா..!