விஷாலின் “ஆக்‌ஷன்” திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது.


விஷால், தமன்னா நடித்துள்ள திரைப்படம் ஆக்‌ஷன். சுந்தர் சி இயக்கியுள்ளார்.

சுந்தர் சி, விஷால் இணையும் மூன்றாவது திரைப்படம் இது. இதற்கு முன்னர் ஆம்பள, மதகஜ ராஜா போன்ற படங்கள் இருவர் கூட்டணியில் வெளியானது.

தற்போது ஆக்‌ஷன் திரைப்படத்தின் டிரைலர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் ஜஸ்வர்யா லஷ்மி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நவம்பரில் வெளியாக உள்ளதாக டிரைலரில் அறிவித்துள்ளனர்.