ராஜமௌலியின் புதிய படத்தில் அனுஷ்கா?


வெற்றிப்பட இயக்குநர் ராஜமௌலி அடுத்ததாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட்டை வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அனுஷ்கா சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மெஹாஹிட்டான பாகுபலி, பாகுபலி 2 படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் பாகமதி, சைரா நரசிம்மா ரெட்டி ஆகிய வரலாற்று படங்களில் நடித்த அனுஷ்கா தற்போது சைலன்ஸ் என்ற படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்து வருகிறார்.