எப்போதும் போல சுந்தர் சி படம்னாலே டென்சன் மறந்து ஒரு விசிட் அடித்து வரலாம் என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்ததே…
அரண்மனை படமும் அப்படியே.. நோ லாஜிக்..நோ மேஜிக்.. ராய் லக்ஷ்மி, ஹன்சிகா, ஆன்ட்ரியா, முன்று நாயகிகளை வைத்துகொண்டு கருத்தா சொல்லமுடியும் . நாம பேய் படம் எடுத்தாலும் நம்பாளுங்களுக்கு காமெடியும், கிளுகிளுப்பும்தான் முக்கியம் என்பதை வழக்கம்போல அள்ளி தெளித்து கிளுகிளுப்பு கலகலப்பு கலந்த பொழுது போக்கு பேய் படத்தை தந்திருக்கிறார் சுந்தர் சி.
கதை வழக்கம்போல கொலைசெய்யப்பட்ட பெண் ஆவியாகி இன்னோர் உடம்பில் புகுந்து பழிவாங்கும் பழைய கதைதான் என்பதால் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை .டெக்னிக்கலாக ஆங்கிலப்படங்களுக்கு இணையாக ஏதாவது டிரை பண்ணியிருப்பார்கள் என்று நினைத்தால் …ம் கும் ஒன்னும் கிடையாது . சந்தானம், கோவை சரளா மனோபாலா டீம் வழக்கம்போல கலகலப்பை மூட்டுகிறார்கள். சுந்தர் சி படங்களில் எப்போதும் தலைகாட்டும் வழக்கமான நடிகர்களும் இதில் வந்து போகிறார்கள் சரவணன் வில்லத்தனம் காட்டி கடைசியில் பேயிடம் அடிவாங்கி செத்து போகிறார் .
கிராமத்து பெண்ணாக ஹன்சிகா கொஞ்சம் அழகை காட்டி, கொஞ்சம் அழுகையையும் காட்டி நம் மனதில் பதிந்து விடுகிறார் .
வினய் கெஸ்ட் ரோல் செய்கிறாரா, இல்லை சுந்தர் சி கெஸ்ட் ரோல் செய்கிறாரா ? என்பது படம் பார்பவர்களுகே தெரியாது. அந்த அளவுக்கு பேய்களின் நடமாட்டம் .. பேய்களை பார்த்து பயம் வர வைப்பதற்காக இசை அமைப்பாளர் பரத்வாஜ் முயற்ச்சி செய்திருக்கிறார். பேய் படத்துக்கு ஏற்றமாதிரி பங்களா படத்தில் அருமையாக இருக்கிறது ..
என்ன ஒரு வித்தியாசம் எல்லா பேய் படங்களிலும் வெள்ளை புடவையில் வரும் பேய் இந்த படத்துல மிஸ்ஸிங் .. ஒளிப்பதிவாளருக்கு அப்படி ஒன்றும் ரிஸ்கான வேலை ஏதும் இதில் இருந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் பேயாய் வரும் ஆண்ட்ரியாவை அழகாய் படம் பிடித்து இருக்கிறார் ..
சுந்தர்.சி படம் இப்படித்தான் இருக்கும், அது அப்படியே இருக்கிறது . என்னதான் டெக்னிக்கலாக ஆயிரம் படங்கள் வந்தாலும் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு ரசிகர்களை சந்தோசப்படுத்த எந்த கால கட்டத்திலும் தன்னால் படம் இயக்க முடியும் என்பதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார் சுந்தர் சி .
மொத்தத்துல பயப்படாம சிரிச்சி கிட்டே ஒரு பேய் படத்தை நம்மை பார்க்க வைத்திருக்கிறார் ..