சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைகிறாரா தனுஷ்?


நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள படம் பட்டாஸ். இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இது தனுசுக்கு 40வது திரைப்படமாகும்.

இதையடுத்து தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜும், 42 வது படத்தை ராம்குமாரும் இயக்க உள்ளனர்.
இதற்கு அடுத்ததாக தனது 43வது படத்தில் சூப்பர்ஸ்டாருடன் தனுஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கும் படத்தில் தனுஷ் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.