கமலுக்கு எதிராக கருத்து தெரிவித்தாரா சமுத்திரக்கனி..?


சோஷியல் மீடியாக்களில் பிரபலங்களின் பெயரில் போலி ஐடி வைத்துக்கொண்டு நிறையே பேர் பிரச்சனைகளை கிளப்பிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், நடிகர் சமுத்திரக்கனி பெயரில் ஒரு ஐடி உலா வருகிறது. அதில் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து பதிவிடப்பட்டுள்ளது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பே பேசி வைத்துவிட்டு தான் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இந்தப் பக்கத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சமுத்திக்கனி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.