நான் காதலுக்கு எதிரானவன் இல்லை – இயக்குனர் கார்த்திக்

கப்பல் படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் தான் காதலுக்கு எதிரானவன் என்றக் கருத்தை நிராகரித்தார்.

25 ஆம் தேதி வெளியாக உள்ள ‘கப்பல்’ திரைப்படம் திரை உலகில் மட்டுமல்ல, ரசிகர்கள்  இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  உள்ளது. படத்தில் நண்பர்கள் காதலுக்கு  எதிராக இருப்பது போலவும் , அதன் பின்னணியில் காதலுக்கு எதிராக சில வசனங்கள் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.   ‘இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் காதல் திருமணம் செய்துக் கொண்டாலும் எனெக்கென்னவோ  அவர்களுக்கு காதல் மீது நம்பிக்கை அற்று விட்டதாகவே கருதிகிறேன்.

அவர்களின் மன நிலையை ஒட்டித்தான் நாயகனின் நண்பர்களுக்கு அத்தகைய வசனங்கள் வழங்க பட்டது. காதலுக்கு எதிராக வசனங்கள் எவ்வளவு கூர்மையாக இருந்ததோ அதை மிஞ்சும் விதமாக  இருக்கும் வி  டி வி கணேஷ் தோதாக கூறும் வசனங்கள்.   சோனம் பாஜ்வா போன்ற ஒரு அழகான ராட்சஷி இருந்தால் ஊரே ஒன்றாக எதிர்த்தாலும் காதலிக்க தான் தோன்றும்.

ராட்சஷி என்று சும்மா சொல்லவில்லை, திறமையாலும், அழகாலும் நிஜமாகவே ராட்சஷிதான். ஒளிப்பதிவாளர் தினேஷ் படத்தின் அவுட்லுக் பிரம்மாண்டமாய் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் நல்ல பின்னணி இசை, பாடல்கள் என கலக்கியுள்ளார்.

இப்படத்தில் எனக்கு உறுதுணையாக நின்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், என் கதைக்கு தேவையான எல்லாவற்றையும் தயங்காமல் வழங்கிய என்னுடைய தயாரிப்பாளர்கள் ‘I’ ஸ்டுடியோஸ் நிறுவனதார்க்கும் , எனக்கு தொழில் அறிவு  வழங்கி ,என்னுடைய படத்தை பார்த்து பாராட்டியதோடு படத்தையும் வாங்கி பெரிய அளவில் பிரம்மாண்டமாக வெளியிடும் ஷங்கர் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவரது பாசறையில் பயின்ற எவரும் சோடை போனதில்லை என்பதை நானும் நிரூபிப்பேன்.