காரில் சுற்றி வராமல் காரை சுற்றிவரும் ஹாரிஸ் ஜெயராஜ்..!

திரையுலக வி.ஐ.பிகள் தங்களது கௌரவத்தை வெளிப்படுத்தும் முதல் அடையாளமாக நினைப்பது தாங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கோடிகளில் மதிப்பு கொண்ட கார்களைத்தான். சிலர் அதனை எடுத்துக்கொண்டு இரவு நேரத்தில் உலா வருவதோடு மட்டும் நிறுத்திக்கொள்வார்கள்.. காரணம் பகல் நேரத்தில் ட்ராபிக்கில் சிக்கி தவிக்க முடியாதே.. இன்னும் சிலர் வீட்டிலேயே நிறுத்தி வைத்துக்கொள்வார்கள்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் இப்படி விலையுயர்ந்த மூன்று கார்கள் வைத்திருக்கிறார். குறிப்பாக ‘லம்போகினி’ என்கிற உயர் ரக கார் ஒன்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வைத்துள்ளார். சென்னைக்கு கப்பலில் வந்த அந்த காரை இங்கே இறக்கும் வழிமுறை தெரிந்தவர்கள் இல்லாததால் ஜெர்மனியிலிருந்து ஆட்களை வரவைத்து காரை இறக்கினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்த காரின் மவுசை.

அதற்கான செலவு மட்டுமே 5௦ லட்சம் ஆனதாம். அப்படியென்றால் காரின் விலை எவ்வளவு இருக்கும் என நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள். அந்த காரை சென்னை டிராபிக்கில் நினைத்தபடி ஓட்ட முடியாது என்பதால் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளாராம்.. ஊரைச்சுற்றி வர கார் வாங்கிவிட்டு இப்போது வீட்டில் நிற்கும் காரை இவர் சுற்றி வருகிறாராம். இத்தனைக்கும் இந்த வகை கார் சென்னையில் அவரிடம் மட்டுமே இருப்பதாக கூறுகிறார்கள். எவ்வளவு கொட்டிக்கிடந்தாலும் அதை அனுபவிப்பதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் இல்லையா..?