காக்கா முட்டைகளுக்கு வீடு வாங்கி கொடுக்க போகிறாரா தனுஷ்..!?

ஒரு தயாரிப்பாளராக தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே, அவர் போட்ட முதலீட்டை எந்தக்குறையும் இல்லாமல் எடுத்து தந்துவிட்டது.. அத்துடன் தேசிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் வாங்கி வந்து படத்தை தயாரித்த தனுஷையும் வெற்றிமாறனையும் பெருமைப்படுத்தி விட்டது.

அந்த சந்தோஷத்தில் வெற்றிமாறன், காக்கா முட்டைகளாக நடித்த இரண்டு சிறுவர்கள் மட்டுமில்லாமல், இந்தப்படத்தில் நடித்த அனைத்து சிறுவர்களின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்வோமே என தனுஷிடம் ஒரு யோசனை சொல்ல, அதை முழுமனதாக ஏற்றுக்கொண்ட தனுஷ் பட ரிலீசுக்கு முன்னரே அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார்.

ஆனால் காக்க முட்டை ரிலீசானபின் சுமார் பத்து கோடிக்கும் மேலே வசூலித்து தந்துள்ளது. தற்போது ‘மாரி’ படம் நல்ல வசூலை அள்ளுவதாக கூறி அந்தப்படத்தில் பணியாற்றிய முக்கிய டெக்னீசியன்களுக்கு தனுஷ் தங்கச்சங்கிலி அணிவித்தார் அல்லவா..?

அப்படியென்றால் காக்கா முட்டை ரிலீஸுக்கு பிறகு எதிர்பாராத வசூலை அள்ளி குவித்திருக்கிறது. ஆக அந்த இரண்டு ‘காக்கா முட்டை’களின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக தனுஷ் அறிவித்தது சாதாரணமானது. அந்த குழந்தைகள் இருவருக்கும் வீடுகட்டி கொடுத்தால் தனுஷின் மதிப்பு இன்னும் உயருமே என சிலர் சொல்லி வருகிறார்களாம். பசங்களால் வந்த பணம் தானே.. பசங்களுக்கு செலவிடுவதில் தப்பே இல்லை. தான்