த்ரிஷாவை சிக்கலில் மாட்டிவிடும் மோகினி போஸ்டர்..!


தற்போது மாதேஷின் இயக்கத்தில் மோகினி படத்தில் நடித்துவருகிறார் த்ரிஷா. இந்தப்படத்தில் லண்டன் வாழ இந்தியரான த்ரிஷா அங்கே சொந்தமாக பேக்கரி வைத்து நடத்துபவராக நடிக்கிறார்.. இன்று இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.. அதை பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை விட அதிர்ச்சியே அதிகம் ஏற்பட்டிருக்கும்..

சேலைகட்டி, சூலம் ஏந்தி உக்கிரமான உருவத்துடன் அம்மானாக நடிக்கும் நடிகைகளை நம்மவர்கள் கும்பிடக்கூட செய்வார்கள்.. ஆனால் கடவுளை அவமதிப்பது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் ஆதரவு தர மாட்டவே மாட்டார்கள். அந்தவகையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அம்மன் அவதாரமாக பத்து கைகளுடன் காட்சியளிக்கும் த்ரிஷாவின் ‘மோகினி’ பட போஸ்டர் நிச்சயம் அவருக்கு சிக்கலையே இழுத்துவிடும் என்றுதான் தெரிகிறது.