“நாலு சீன்ல நடிக்க நான் தயாரா..?” ; சீறிய நயன்தாரா..!

மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான ‘பெங்களூரு டேய்ஸ்’ படம் தமிழில் ரீமேக் ஆகிறதல்லவா..? பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்குகிறார். ‘பெங்களூரு டேய்ஸ்’ படத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி ஆகியோர் நடித்த கேரக்டர்களில் முறையே ஆர்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவரும் நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக நஸ்ரியா நடித்த வேடத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்க, ஒரிஜினலில் பார்வதி மேனன் நடித்த கேரக்டரில் மீண்டும் அவரே நடிக்கிறார். ஆனால் நித்யா மேனன் நடித்த கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.. கொஞ்சநாள் கழித்து நித்யா மேனன் நடிக்கவில்லையாம், அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என செய்தி கசிந்தது.

இது கூட ஆர்யாவின் ஸ்பெஷல் அழைப்பின் பேரில் தான் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது. நயன்தாராவும் இல்லையாம் அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் சமந்தா நடிக்கிறாராம். அப்படியானால் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டதில் உண்மை இல்லையா..?

நயன்தாராவை நடிக்கச்சொல்லி கேட்டதும் உண்மை.. அவர் நடிக்க மறுத்துவிட்டதும் உண்மை.. ஆனால் அவர் மறுக்க இரண்டு காரணங்கள் மட்டுமே இருந்தன… முதல் காரணம் நயன்தாராவை ஏற்க சொன்ன நித்யா மேனன் கேரக்டர் பிளாஸ்பேக்கில் பத்து நிமிடம் கூட வராது.. அதனால் நாலு சீன் கூட இல்லாத கேரக்டரில் என்னை நடிக்க எப்படி கூப்பிடலாம் என பொரிந்துவிட்டாராம்.

சரி.. அதையும் மீறி அதில் நடிக்கலாம் என்று அவர் ஒப்புக்கொள்ள எண்ணினாலும் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரால் நடிக்க முடியாது. ஏன் ஆர்யாவுக்கும் அவருக்கும் ஒரு சீன் கூட காம்பினேஷன் கிடையாது.. படத்தில் வரும் உம்மனாமூஞ்சி ராணாவுக்குத்தான் நயன்தாரா ஜோடியாக நடிக்கவேண்டும்.

ஆனால் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க, நயன்தாராவுக்கு பெரிதாக விருப்பம் இல்லை.. ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோதுகூட ராணாவுடன் பழகுவதில் பெரிதாக ஈடுபாடு காட்டாமல் தான் பழகினாராம் நயன்தாரா.. இந்த காரணங்களால் தான் தன்னை தேடிவந்த இயக்குனர் பொம்மரிலு பாஸ்கரை ஏமாற்றத்துடன் வழியனுப்பி வைத்தாராம் நயன்தாரா.

அதன்பின்னர்தான் சமந்தாவை ஒகே பண்ணினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் சமந்தாவும் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி வெளியானால் ஷாக்காகாமல் அதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்..