சரத்குமார் vs விஷால் ; அடுத்த ஆட்டத்தை துவக்கி வைத்த மிஷ்கின்…!


அவ்வளவுதான்.. ஒரு பக்கம் இயக்குனர்களுக்கும் பொறுமையில்லை.. நடிகர்களுக்கும் காத்திருக்க நேரமில்லை.. கூட்டணி சேரலாம் என வாக்குத்தந்தவர்கள் எல்லாம் பிரிகிற ட்ரெண்ட் கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது.. இதை கொஞ்ச நாளைக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் சூர்யா.. கௌதம் மேனன் படத்திற்காக காத்திருந்து காலங்கள் வீணானதுதான் மிச்சம் என அந்த புராஜெடுக்கு டாட்டா காட்டி விலகினார்..

இதேபோல நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த சண்டக்கோழி புராஜெக்டை விஷால் தூக்கிப்போட்டு விட்டார். இதற்கு லிங்குசாமி தெலுங்கில் அல்லு அர்ஜுன் படம் கிடைத்துவிட்டதால் அதிக அக்கறை காட்டாததே காரணம். இப்போது இயக்குனர் மிஷ்கினின் முறை.. ரொம்ப நாளாகவே சரத்குமாரை வைத்து ஒரு படம் பண்ணுவதாக சொல்லி வந்த மிஷ்கின், இனி அவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று விஷால் பக்கம் தாவிவிட்டார்.