முதலில் ஜெயம் ரவி யூனிட்டார் மீது கோபம் கூட வந்தது உண்மைதான். டி.ராஜேந்தரை கிண்டல் பண்ணும் விதமாக ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண்டணக்கா’ பாடலை இடம்பெற வைத்திருக்கிறார்களோ என்று. ஆனால் படத்துல ஜெயம் ரவி டி.ஆர் ரசிகனாக நடிக்கிறாருங்க.. அதனால் டண்டணக்கான்னு பாட்டு வச்சா என்ன தப்பு..? அதுகூட அவரை கிண்டல் பண்ணி வைக்காம, உயர்வாத்தான ‘தல’ அஜித் ரேஞ்சுக்கு வச்சிருக்கோம் என சொல்லிப்பார்த்தார்கள்..
ம்ஹூம்.. டி.ஆர் மசிவதாக தெரியவில்லை.. பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அப்படியா, சரி.. ‘டண்டணக்கா’ என்பது டி.ஆருக்கு மட்டுமே சொந்தமான வார்த்தையா என்ன..? யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாமே என கொஞ்சம் எகிறியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. அதற்கும் டி.ஆர் சளைக்கவில்லை.. எதற்கு இப்படி பல்ஸ் ரேட் குறையாமல் பகடை உருட்டுகிறார் டி.ஆர்.
விவகாரத்தை கொஞ்சம் ஆழமாக விசாரித்தால் உள்ளே வம்பு இருப்பது.. சாரி சிம்பு இருப்பது தெரிகிறதாம். ஏங்க அவர் என்ன பண்ணுனாருங்க.. சொல்லப்போனா ஜெயம் ரவி நடிக்கிற இன்னொரு படத்துல பாட்டு கூட பாடப்போறாரு.. அவருக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்காதுங்கன்னு சிலர் சிம்புவாகாக சர்டிபிகேட்டை எடுத்துக்கொண்டும் வந்தார்களாம்.. ஆனால் இது விஷயமே வேறாம். ரோமியோ ஜூலியட்’ படத்தின் ஜூலியட், அதாங்க கதாநாயகி யாரு..? ஹன்சிகா.. ஓகே ஹன்சிகா யாரு…? சிம்புவின் முன்னாள் காதலி.. சிம்புவுடன் காதல் முறிவை ஏற்படுத்தி அவரை இரண்டாவது முறையாக தர்ம சங்கப்படுத்தியவர்.
அதில் சிம்புவுக்கு ஒரு பக்கம் காயம் பட்டிருந்தாலும் அவரது தந்தைக்கும் ஹன்சிகா மீது ஒரு தார்மீக காரணம் இருக்கத்தானே செய்யும். அதுதான் ஹன்சிகா படத்துல என் சம்பந்தப்பட்ட பாடல் இடம்பெறக்கூடாது என களத்தில் இறங்கிவிட்டாராம். இங்க அடிச்சா அங்க வலிக்கும் என்கிற கோணத்தில் இந்த ‘டண்டணக்கா’ விவகாரத்தில் மகனும் தந்தையின் செயல்பாடுகளுக்கு ரெட் கார்டு போடாமல் தொடர்ந்து கிரீன் சிக்னல் காட்டிவருகிறாராம். பழிவாங்குரதுல இது புதுவிதமான டெக்னிக்கா இருக்கேய்யா..?