சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்


மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிதுள்ள இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர்.

தற்போது இப்படத்தைப் பற்றிய புதிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஹீரோ படத்தின் இரண்டாவது பாடல் நவம்பர் 29ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் முதல் வாரம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.