“நல்லவன்னு சொன்னா நம்பிடாதீங்க” – வேதாளம் கூறும் உண்மை..!

சில முன்னணி ஹீரோக்கள் தங்களது ஒப்பனிங் பாடலில் தன்னைப்பற்றிய உண்மையான நிலைப்பாட்டை பாடலாக எழுதச்சொல்வார்கள்.. எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அது கச்சிதமாக பொருந்தியது.. ஆனால் தற்போதைய காலத்தில் அஜித்தை விட, விஜய் படங்களில் தான் ஒப்பனிங் பாடல் தவறாமல் இடம்பெற்று வருகிறது..

அஜித் போனால் போகிறதென்று தன்னைப்பற்றியும் ஒரு படத்தில் பாடலில் சொல்வோம் என்று ‘வீரம்’ படத்தில் ‘நல்லவன்னு சொன்னா நம்பிடாதீங்க’ என்கிற ஓப்பனிங் பாடலை வைக்க சொல்லியிருப்பார். அதில் தன்னை பற்றிய உண்மையை முதல் வரியிலேயே சொல்லியிருப்பார்.

சிம்ப்ளிசிட்டி, யார் வம்புக்கும் போகாதவர் என்பது ஒரு சில மீடியாக்கள் அவரைப்பற்றி ரசிகர்களிடம் உருவாக்கி வைத்திருப்பது ஒரு பிம்பம்… மாயை… அப்படி வம்புக்கு போகாதவர் என்றால் போன வாரம் அவர் பார்த்த வேலையை என்னவென்று சொல்வீர்கள்..?

ஏற்கனவே அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் வாய்க்கா தகராறு ஓடிக்கிட்டு இருக்கு.. இதுல எரியுற நெருப்புல இன்னும் எண்ணெய் ஊத்துற மாதிரி காரியத்த பண்ணினத கவனிச்சீங்களா..? முதல் நாள் மாலை 7.30 மணியளவில் ‘புலி’ படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது. இதுவெளியாகி 4.30 மணி நேரங்களில் அதாவது 12 மணிக்கு அஜித்தின் ‘வேதாளம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது..

இதைவைத்து இரண்டு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டது இரண்டு நடிகர்களுமே எதிர்பார்த்தது தான்.. அதைவிட அஜித் எதிர்பார்த்தது என்னவென்றால் பொதுவான ரசிகர்களிடம் ‘புலி’ ட்ரெய்லர் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதே அதை அமுக்கி விடுவதுபோல ‘வேதாளம்’ பர்ஸ்ட் லுக் வெளியிடப்படவேண்டும் என்பதுதான்.. அதுதான் நடந்ததும் கூட..

‘நல்லவன்னு சொன்னா நம்பிடாதீங்க’ன்னு ‘அஜித்’ ஏன் சொன்னார்னு இப்ப புரியுதா ஜனங்களே..?

பின் குறிப்பு: கமலின் ‘தூங்காவனம்’ ட்ரெய்லர் வெளியான மறுநாளே ரஜினியின் ‘கபாலி’ பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லையா….? அப்படிஎன்றால் ரஜினி கூட இப்படித்தானே செய்திருக்கிறார்.. இதில் அஜித்தை மற்றும் குற்றம் சொல்லலாமா என நீங்கள் கேட்கலாம்.. சொல்லலாமே! கமல் மீது சொல்லலாம்! ஏன்னென்றால் “கபாலி” படத்தின் பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என ரஜினி தரப்பில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்து இருந்தனர்.. கமல் தான் ஒரு நாள் முன்பு தனது “தூங்காவனம்” படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்.