அஜித் & விஜய் பட இயக்குனர்கள் ரஜினி படத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இதைத்தான்..!


விஜய் நடித்துவரும் அவரது 61வது படத்தின் (இன்னும் பெயர் வைக்கவில்லை.. நோட் தி பாயின்ட்) படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் கடந்த மாதம் திருட்டுத்தனமாக வெளியானது என குய்யோ முறையோ என குதித்தார்கள்.. இதற்குமுன் புலி, பைரவா ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றபோதும் இதேபோலத்தான் நடந்தது.

அங்கே அஜித் படத்தில் மட்டும் என்ன வாழுதாம்..? படம் வெளியாகும் முதல் நாள்வரை டைட்டிலே வைக்காமல் ரசிகர்களை சுத்தலில் விடும் வேலையைத்தானே செய்து வருகிறார்கள். அவரது ஒரு புகைப்படத்தை வெளியிடுவதற்கு எத்தனை ஆர்ப்பாட்டம்..? அது வெளியானபின் தான் எத்தனை அமர்க்களம்..?

ஏன் படத்தில் இடம்பெறும் சில புகைப்படங்களை வெளியிட்டால் அப்படியே முழுக்கதையும் தெரிந்துவிட போகிறது பாருங்கள்… அட போங்கய்யா.. கதை இருக்கிற படம் எடுப்பவர்கள் தான் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்.. கதையே இல்லாமல் எடுப்பவர்களுக்கு புகைப்படங்கள் வெளியாவதா பிரச்சனை..?

சூப்பர்ஸ்டார் ரஜினியை பாருங்கள்.. அவரது ஒவ்வொரு புதிய புகைப்[படமும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது..? ஆனால் அப்படிப்பட்டவரே தனது படத்திற்கு ‘காலா’ என டைட்டில் அறிவித்து பர்ஸ்ட் லுக்கையும் சேர்த்து வெளியிட்டுவிட்டுத்தான் படப்பிடிப்புக்கே கிளம்புகிறார்.. இதோ முதல்நாள் படப்பிப்பிடிப்பில் நடந்த காட்சிகளின் புகைப்படங்களை அன்றே வெளியிட்டாரே இயக்குனர் ரஞ்சித்..?

இதனால் என்ன குடி முழுகிவிடப்போகிறது..? இன்னும் கூடுதல் பப்ளிசிட்டி தான் கிடைக்கும்.. அதுதான் நடக்கிறது. மற்றபடி அஜித், விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்கள் எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் ஷூட்டிங்ஸ்பாட்டில் எடுக்கப்படும் ஆயிக்ரகணக்கான புகைப்படங்களை ஆல்பம் போட்டு வீட்டில் வைத்து தாங்கள் மட்டுமே பார்த்து மகிழ வேண்டியதுதான்..

ரசிகர்களுக்காக எடுப்பதில், எதை ரசிகர்களிடம் சேர்க்கவேண்டுமோ அதை உரிய நேரத்தில் சேர்ப்பதில் தான் ஒரு படத்தின் வெற்றியும் பப்ளிசிட்டியும் இருக்கிறது. அதைவிட்டுவிட்டு, அய்யய்யோ அந்த கெட்டப் வெளியாகிருச்சே, இந்த கெட்டப் வெளியாகிருச்சே என புலம்பிக்கொண்டிருந்தால் படம் வெளியாகும் நேரத்திலும் புலம்பத்தான் வேண்டிஇருக்கும்..

அஜித், விஜய்யை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் ரஜினியையும் ரஞ்சித்தையும் பார்த்தாவது திருந்துவார்களா..?