கட் சொன்னபின்னும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி..!


வணக்கம் சென்னை படத்தை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தை இயக்கிவருகிறார் கிருத்திகா உதயநிதி. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். ஆர்.கே.சுரேஷ், யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, ரொம்ப நாட்களாகவே சீரியஸாக நடித்து வருகிறேன் என்கிற குற்றச்சாட்டு என் மேல் இருக்கிறது.. அதை போக்கும் விதமாக இந்தப்படத்தில் ரோமான்சிலும் கலக்கியுள்ளேன் என கூறினார். உடனே அருகில் அமர்ந்திருன்ம்த இயக்குனர் கிருத்திகா உதயநிதி, அவர் சொல்வது உண்மைதான்.. கட் சொன்னபின்பும் கதாநாயகியை கட்டிப்பிடித்து நடித்துக்கொண்டே இருந்தார் என கூறினார்.. ஆக விஜய் ஆண்டனியும் இந்த விஷயத்தில் முன்னேறிவிட்டார் போல.