தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியான வெங்கட்பிரபு படம்


ஆர்.கே. நகர் திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். தனத பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் மூலம் வெங்கட்ப பிரபு தயாரித்துள்ள இத்திரைப்படத்தை இயக்குநர் சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

படத்தின் நாயகனாக வைபவ் நடித்துள்ளார். சனா அல்தாஃப், இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனது

இந்நிலையில் இத்திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் என்னும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அரசியல் கலந்த காமெடி படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.