சீமத்துரை – விமர்சனம்


கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் கீதன்.. சீமத்துரை போல எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றி வருபவரை முதலாம் ஆண்டு மாணவி வர்ஷா ஈர்க்கிறார். கீதன் காதலை சொல்லப்போக, வர்ஷா நட்பாக பழகலாம் என சொன்னாலும் ஒருகட்டத்தில் காதலில் விழுகிறார். விஷயம் வர்ஷாவின் தாய்மாமனுக்கு தெரியவர, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் வர்ஷாவின் அப்பாவிடம் சென்று தனக்காக வர்ஷாவை பெண் கேட்கிறார். வர்ஷாவின் அப்பாவோ அவரை அவமானப்படுத்திவிட்டு வேறு மாப்பிளை பார்த்து பேசி முடிக்கிறார்.

கீதன்-வர்ஷா காதல் என்ன ஆனது..? வர்ஷா மாமனின் கல்யாண கனவு நிறைவேறியதா, வர்ஷாவின் தந்தை எடுத்த புதிய முடிவால் என்ன சிக்கல் உருவானது, இதையெல்லாம் தாண்டி வர்ஷா யாருக்கு சொந்தமானார் என்பதெல்லாம் மீதிக்கதை.

நாயகன் கீதன் ஆள் பார்க்க நன்றாக இருந்தாலும் அடிக்கடி பல்லைக்காட்டி சிரித்துக்கொண்டே படம் முழுதும் அவர் நடித்திருப்பது எரிச்சலையே ஏற்படுத்துகிறது.. தொண்ணூறுகளில் நாம் பார்த்து பார்த்து சலித்த காதலன்களை அப்படியே பிளாக் அன்ட் ஒயிட் ஜெராக்ஸ் எடுக்க முயற்சித்திருக்கிறார்..

டூப்ளிகேட் நஸ்ரியா போல வரும் நாயகி வர்ஷா சில காட்சிகளில் மட்டுமே ஈர்க்கிறார். எப்போதும் இயல்பாக நடிக்கும் விஜி சந்திரசேகர் இதில் கொஞ்சம் ஓவராத்தான் ஆக்டிங் பண்ணியிருக்கிறார். வர்ஷாவின் தாய்மாமா மற்றும் இன்னொரு துணை வில்லன் என ஒரு சில கேரக்டர்களும் வந்துபோகிறார்கள்.

டெக்னாலஜியும் தொழில்நுட்பமும் வளர்ந்தாலும் கூட, அதை இம்மியளவுகூட பயன்படுத்த மாட்டேன், அதற்கு அப்டேட் ஆகமாட்டேன் என அடம்பிடிக்கும் இயக்குநராகத்தான் இந்தப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கொஞ்சம் கூட திருப்பம் இல்லாத திரைக்கதை, அரதப்பழசான காட்சிகள் என அலுப்பையே தருகிறான் இந்த சீமத்துரை