‘றெக்க’ படத்தால் உடைந்த பிரபுசாலமனின் திட்டம்..!


தொடரி படத்தின் தோல்வியை கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணித்து, அதிலிருந்து மீண்டுவிட்டார் பிரபுசாலமன்.. (அதை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கு ஜீரணமாக இன்னும் நாளாகும் என்பது வேறு விஷயம்.) அடுத்ததாக தனது வெற்றிப்படமான கும்கி’யின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்..

விக்ரம் பிரபுவிடம் கேட்டால் உடனே கால்ஷீட் கொடுத்து விடுவார்.. தன்னை அறிமுகப்படுத்திய குருவாச்சே.. அதேபோல இமானும் தம்பி ராமையாவும் பிரபுசாலமன் என்கிற ரயில் ஓடுவதற்கேற்ற தனடவாலங்களாக எப்போதும் கூடவே வருபவர்கள் என்பதால் அவர்களும் இந்தப்படத்தில் இருப்பார்கள் என்பது பற்றி சொல்லவே தேவையில்லை..

ஆனால் கதாநாயகி அதே லட்சுமி மேனனா என்றால் அதுமட்டும் இல்லை என அடித்து சொல்கின்றனர் பிரபுசாலமன் தரப்பினர்.. அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் ‘வேதாளம்’ படத்தில் நடித்தவரை எந்த பிரச்சனையும் இல்லை.. லட்சுமி மேனன் தான் பிரபுசாலமனின் மனதில் இருந்தார்.

ஆனால் சமீபத்தில் வெளியான ‘றெக்க’ படத்தில் லட்சுமி மேனனின் பப்ளிமாஸ் உருவத்தை கண்டு பிரபுசாலமனின் கதாநாயகி கனவு சுக்குநூறாக உடைந்து விட்டது… இனி அவர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதால் வேறு கதாநாயகி தேட ஆரம்பித்துள்ளாராம் பிரபு சாலமன்.