அப்போ பாகுபலி.. இப்போ கபாலி ; சஞ்சலத்தில் ஷங்கர்..!


கடந்த வருடம் முன்பு அறை பிரமாண்ட படங்களின் இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான் என்கிற நிலையே இருந்துவந்தது.. ஆனால் எஸ்.எஸ்.ராஜமவுலியின் டைரக்சனில் வெளியான பாகுபலி பிரமாண்டம், வசூல் என்கிற இரண்டு படங்களில் மிகப்பெரிய சாதனையை செய்து ஷங்கருக்கு சவால் விட்டது.

அதனால் தான் தற்போது ரஜினியை வைத்து இயக்கிவரும் ‘2.O’ படத்தை பாகுபலியை மிஞ்சு அளவில் எடுக்கவேண்டு, அதைவிட அதிக அளவில் வசூலிக்க வைக்கவேண்டும் என முனைப்புடன் இரவு பகலாக செயல்பட்டு வருகிறார் இயக்குனர் ஷங்கர்..

ஆனால் மிக சாதாரண முறையில் ஆர்ப்பாட்டமான டெக்னீசியன்கள் என யாரும் இல்லாமல் ரஜினி ஒருவரையே பிரதானமாக வைத்து துவங்கப்பட கபாலி படத்திற்கான எதிர்பார்ப்பும் அதற்கு கிடைத்துவரும் பப்ளிசிட்டியும் ஷங்கரை மலைக்க வைத்திருக்கிறதாம்..

இன்னும் படம் வெளியாகத நிலையில் மற்ற வகையிலேயே 200 கோடி ரூபாயை கபாலி வசூலித்துவிட்டதாக சொல்கிறார்கள். இனி படம் ரிலீசானால் தியேட்டர் கலெக்சனில் பட்டையை கிளப்பும்.. அப்போது அதன் வசூல் நிலவரங்கள் பாகுபலியைவிட கூடுதலாகவே நிற்கும் என்றே தெரிகிறது..

அதுமட்டுமல்ல, கபாலி படம் 50 நாடுகளில் வெளியாவதும், சுமார் பத்தாயிரம் தியேட்டர்களில் வெளியாவதும் என எல்லா ஏரியாக்களிலும் புதிய சாதனையை படைத்து வருகிறது.. இரண்டே படங்கள் பண்ணிய இயக்குனரின் படத்தின் ரீச் இந்த அளவுக்கு என்றால், அடுத்ததாக ரஜினியை வைத்து தான் இயக்கிவரும் படத்தின் ரீச் ஒரு சதவீதமாவது கூடுதலாக இருக்கத்தானே வேண்டும்.. ஆனால் அது சாத்தியமா என்கிற சஞ்சலத்திலேயே ரஜினி படத்தை இயக்கி வருகிறாராம் ஷங்கர்.