புதிய படத்தில் பைக் ரேஸராக அஜித் ?


நடிகர் அஜித் தனது புதிய படத்தில் பைக் ரேஸராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தையும் இயக்குநர் எச். வினோத் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தலைநகர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வெளியில் வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதில் அஜித் டை அடித்து புதிய தோற்றத்தில் இருக்கிறார். ஒரு வேளை இந்த புதிய தோற்றத்தில் தான் அஜித் தனது புதிய படத்தில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.