மெர்லின் – விமர்சனம்

 

பேய்ப்படங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடக்கிவிடலாம். அதற்குள் தான் படைப்பாளிகள் வித்தியாசம் காட்டியாக நிலை. அதில் இயக்குனர் கீரா ‘‘மெர்லின்’ படத்தில் என்ன வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார் பார்க்கலாம்..

உதவி இயக்குநரான விஷ்ணுபிரியனுக்கு இயக்குனராவது லட்சியம். ஆனால் அவர் அறையில் இருக்கும் அவரது நண்பர்கள் அவரக்கு தொந்தரவாக இருக்க, அவர்களை சைலன்ட் செய்வதற்காக பொய்யான பேய் கதை ஒன்றை சொல்லி அவர்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார்.

ஆனால் அடுத்துவரும் நாட்களில் விஷ்ணுப்பிரியனுக்கு, தான் பொய்யாக சொன்ன அனைத்தும் நிஜத்தில் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் பொய்யாக சொன்ன மெர்லின் என்ற பேயே அவர் முன்னாள் வர அதை தொடர்ந்து மாநலம் பாதிக்கப்படுகிறார்.

எதற்காக மெர்லின் பேய் விஷ்ணுப்ரியனை டார்கெட் செய்கிறது..? அதில் இருந்து மீண்டு வந்து சினிமாவில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பது தான் மீதிக்கதை.

இப்படத்தின் இயக்குநர் வ.கீரா, பேய் குறித்த விஷயத்தை அறிவியல் பூர்வமாக சொல்லியிருக்கிறார்.

கூத்துப்பட்டறை மாணவரான விஷ்ணுபிரியன் ஓரளவு தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பேய் பயத்தால் உரைந்துப்போகின்ற இடங்களிலும் குறை வைக்காமல் நடித்திருந்தாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆவதாக ஒரு உணர்வு ஏற்படவும் செய்கிறது.

மெர்லின் என்ற டைட்டில் ரோலில் நடித்துள்ள ஹீரோயின் அஸ்வினி, கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார். லொள்ளு சபா ஜீவா, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் காமெடி நடிகர்களாக அல்லாமல் குணச்சித்திர நடிகர்களாக வலம் வந்திருந்தாலும், அவர்களது சில பேச்சுலர் காமெடி சிரிக்க வைக்கிறது.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாகும், பாடல் வரிகள் புரியும்படியாகும் இருக்கிறது. முத்துக்குமரனின் ஒளிப்பதிவும், சாமுவேலின் படத்தொகுப்பும், பேய் இருக்கு, ஆனா இல்ல, என்பதை ரசிகர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் சொல்லியிருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த மோகினி காட்சி, ஒட்டு மொத்த திரையரங்கையே சில நிமிடங்கள் பயத்தில் உரைய வைப்பதோடு, பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. பிறகு சகஜமான நிலைக்கு திரும்பும் திரைக்கதை ரசிகர்கள் யூகித்துவிடும்படி இருக்கிறது.

இருந்தாலும், இயக்குநர் கீரா, திரைக்கதையில் எதிர்ப்பாரத ட்விஸ்ட்டாக காதல் கதை ஒன்றை சொல்வதோடு, அதையும் பேய் கதையோடு சம்மந்தப்படுத்தி திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.

பேய் படத்தை காமெடியாக சொல்லி வந்த தமிழ் சினிமாவில், புதிய முயற்சியாக அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘மெர்லின்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.