கஸ்டடி ; விமர்சனம்

வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் கஸ்டடி. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். கஸ்டடி படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.

முதல்வர் தொடர்பான அனைத்து ரகசியங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ராசுவை சிபிஐ அதிகாரி ஒருவர் கையும் களவுமாக பிடிக்கிறார். ராசு வாய் திறந்தால் நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விடும் என்று அஞ்சும் முதல்வர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவரை எப்படியாவது தீர்த்துக்கட்ட முயற்சிகள் எடுக்கிறார்.

இதில் திடீரென உள்ளே புகும் கான்ஸ் டபுள் சிவா ராசுவை காப்பாற்றி சிபிஐ அதிகாரிக்கு உதவுகிறார. அரசுப்பணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக வேலைப்பார்க்கும் பரபர சேசிங் திரைக்கதையில் ஒரு இடத்தில் சிவாவின் காதலியும் வந்து ஒட்டிக்கொள்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது? ராசு என்ன ஆனான்? சிவாவின் ஏன் ராசுவை காப்பாற்ற வேண்டும்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலே படத்தின் கதை!

கான்ஸ்டபிள் சிவாவாக நடித்திருக்கும் நாக சைதன்யா சிறப்பாக நடித்துள்ளார். தமிழுக்கு புதிது போலவே அவர் தெரியவில்லை. க்ரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், ப்ரியாமணி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் மாநாடு அளவுக்கு கஸ்டடி இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல். ஸ்டண்ட் சிவாவும்,மகேஷ் மேத்யூம் தங்களது பணியினை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கேமராமேன் கதிரின் ஒளிப்பதிவு நம்பகத்தன்மையை கூட்டி இருக்கிறது.

மொத்தத்தில் கஸ்டடி தாராளமாக இருக்கும்.