ராவணக்கோட்டம் ; விமர்சனம்

மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கி உள்ள திரைப்படம் இராவண கோட்டம். இதில், சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு என இரண்டு தெருங்கள் இருக்கின்றன. மேலத்தெரு, கீழத்தெரு என்றால், மேல்சாதி, கீழ்சாதி என்று பொருள் அதை நேரடியாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார். மேலத்தெருவில் பண்ணையார் பிரபுவின் மகன் சாத்தனு பாக்யராஜ். அதே போல கீழத்தெருவில் இருக்கும் இளவரசனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.

ராமநாதபுரத்தில் கருவேலம் முள் செடிகள் அதிகமாக வளர்ந்து அந்த நிலத்தடி நீரை குடித்துவிடுகிறது. இதனால், அந்த மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பஞ்சத்திற்கு கருவேல மரம்தான் காரணம் என்பது தெரியவர, கிராம மக்கள் இணைந்து கருவேல மரங்களை வெட்டுகிறார்கள்.

ஆனால், கார்ப்பரேட் கம்பெனி ஒன்றை கிராமத்தில் இயற்கை வளத்தை சுரண்ட அனுமதிக்கவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்துகிறது. இதில் சாந்தனு கயல் ஆனந்தியை காதலிக்கிறார். அதே நேரம் இளவரசனு ஆனந்தியை காதலிப்பதால், இருவரின் நட்பிலும் விரிசல் ஏற்படுகிறது. இதனால், ஒற்றுமையாக இருந்த கிராமத்தில் பகையை வளர்ந்து ஆதாயம் தேடுகிறது கார்ப்பரேட் கம்பெனி.

ஊர்தலைவராக பிரபு. நடை, உடை, பாவனை என அனைத்திலும் தலைவருக்கான அக்கறையையும், அரவணைப்பையும், ஆக்ரோஷத்தையும் அளவாக கடத்தியிருக்கிறார். இளவரசு வழக்கம் போல கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார். சாந்தனுவுக்கு இது வித்தியாசமான களம். பெரும்பான்மையான இடங்களில் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எமோஷனை கடத்துவதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து இருக்கலாம். அவரின் காதலியாக வரும் ‘கயல்’ ஆனந்தி சிறப்பாக நடித்துள்ளார்.

1957 ஆம் ஆண்டு நடந்த முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்து கதையை சொல்லி இருக்கிறார் விக்ரம் சுகுமாறன். ஒரு பக்கம் முத்துராமலிங்கத்தேவரை காட்டும் அவர் இன்னொரு புறம் அம்பேத்கரையும் காண்பிக்கிறார். ஆனால் சம்பவம் நடப்பது அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் என்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

போலி அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை படத்தில் துணிந்து சொல்லி இருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாறை நிச்சயம் பாராட்ட வேண்டும்.