ரணம் ; விமர்சனம்


சென்னை பல்வேறு பகுதிகளில் எரிந்த கால்கள், கைகள் மற்றும் உடற்பகுதி அடங்கிய மூன்று பெட்டிகளில் மனித ச்டலனகள் கிடைக்கின்றன. இந்த கொலைகளை கண்டுபிடிக்க போலீஸுக்கு உதவியாக வைபவ்,, க்ரைம் சீன் கதை எழுத்தாளர் மற்றும் இறந்தவர்களின் சிதைந்த முகத்தின் அடையாளத்தை வைத்து அவர்கள் உருவத்தை தத்ரூபமாக வரையும் கலைஞர் ஆகியோர் களத்தில் இறங்குகின்றனர். இதில் கிடைத்த உடல் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமானது என்று தெரிய வருகிறது.

இதற்கிடையில், வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் தலைமறைவாக, புதிய பொறுப்பை ஏற்கும் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப் வைபவ் கூட்டணியுடன் சேர்ந்துகொலையாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இருவரும் குற்றவாளிகளை நெருங்கும் போது, தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்து அவர்களை திசை திருப்புகிறது.

இறுதியில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்களா? இந்தக் கொலைகளுக்கெல்லாம் காரணம் யார்? எதற்காக இந்த கொடூர கொலைகளை செய்தனர்? என்கிற கேள்விகளுக்கு பதிலை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

படம் முழுக்க வைபவ்- தான்யா சுற்றி தான் கதை நகர்கிறது. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள இந்த கதாபாத்திரத்தில் நடிகர் வைபவ் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். கதைக்கேற்றவாறு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்துள்ளார்.

கொலைகளுக்கான பின்னணியை விறுவிறுப்பாக துப்பு துலக்கும் பெண் இன்ஸ்பெக்டராக வரும் தன்யா ஹோப் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. கதையின் மையப்புள்ளியாக வரும் நந்திதா ஸ்வேதா, இளம் விதவையாக 10 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருப்பது ஆச்சரியம் மகளை இழந்து கதறி அழும் காட்சியில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். வைபவின் காதலியாக நடித்திருக்கும் சரஸ் மேனன், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.

உதவி காவல் அதிகாரியாக சுரேஷ் சக்ரவர்த்தி, முக்கிய திருப்பத்தை தரும் கதாபாத்திரத்தில் ப்ரணிதி, டார்லிங் மதன், ஜீவா சுப்ரமணியம், பத்மன், விளங்கு கிச்சா ரவி, தசரதி, தயாளன் ஆகியோர் படத்தின் தூண்களாக இருந்து படத்தின் விறுவிறுப்பை தக்க வைத்துள்ளனர்

த்ரில்லர் படம் அதுவும் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடக்கும் படம் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு வேலை அதிகம் இருக்கும். அதை சுகமான சுமையாக ஏற்று நேர்த்தியாகப் படம்பிடித்திருக்கிறார். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அரோல்கொரோலியின் முன் அனுபவங்கள் படத்துக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.பாடல்களும் இதமாக அமைந்திருக்கின்றன

கிரைம் திரில்லர் கதையை விறுவிறுப்பான திரைக்கதை கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷெரீப். கிரைம் திரில்லர் படம் என்றாலே எளிதில் யூகிக்காத வகையில் திரைக்கதையின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் திரைப்படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நந்திதாவிற்கும் வைபவ்விற்கும் உள்ள தொடர்பு. எளிதில் யூகிக்க இயலாத வகையில் அமைந்திருப்பதால் அதனை உருவாக்கிய இயக்குநருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.