தலைநகரம் 2 ; விமர்சனம்

2006ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 17 ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறது. இரண்டாம் பாகத்தை துரை இயக்கியிருக்கிறார். முதல் பாகத்தை போன்று இல்லாமல் தலைநகரம் 2 படம் ஆக்ஷன், வன்முறையை மையமாக கொண்டிருக்கிறது.

தலைநகரம் முதல் பாகத்தில் வட சென்னையின் மிகப் பிரபலமான ரவுடியாக ரைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுந்தர் சி, இந்தப் படத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரியாக வருகிறார். இந்நிலையில் தென் சென்னை,வடசென்னை, மத்திய சென்னை என மூன்று பகுதிகளையும் மூன்று பெரிய ரவுடிகள் கைவசம் வைத்திருக்கின்றனர். இவர்கள் மூவருக்குள்ளும் பிரச்சனை ரைட், அதன்பிறகு இந்த மூவரையும் எதிர்க்க மீண்டும் ரௌடியாக களம் இறங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் மீதி கதை.

முதல் பாகத்தை தூக்கி நிறுத்தியதே வடிவேலுவின் காமெடிதான். அந்தக் குறை இரண்டாம் பாகத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது. எப்போதுமே ஜாலியாக பார்த்த சுந்தர்சியை இப்படத்தில் ஒரு இடத்தில் கூட நாம் ஜாலியாக பார்க்க முடியாது எப்போதுமே இறுக்கமான முகத்துடன் கம்பீரமான நடையுடன் ஒரு ரவுடிக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

மூன்று வில்லன்களில் பாகுபலி பிரபாகரன் மட்டுமே நமக்கு தெரிந்த அடையாளம். நாயகிக்கு நடிக்க ஒரு சில வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் டான் அசோக்கிற்குத்தான் மிகப்பெரிய வேலை இருந்திருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். ஜிம்ரனின் பின்னணி இசை பல இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது, குறிப்பாக இப்படத்தின் BGM பல காட்சிகளை ஒரு படி மேலே எடுத்துச் சென்றிருக்கிறது.