சாப்பாடு போட்ட ஹன்ஷிகா ; எஸ்கேப் ஆன சமந்தா..!


புதிய நடிகர்சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக பொதுக்குழுவை கூட்டி நல்லபடியாகவும் நடத்தி முடித்துவிட்டார்கள் நாசர், விஷால் குழுவினர்.. எதிர்பார்த்தபடியே சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூன்று பேருமே ஆப்சென்ட்.. ஆனால் இந்த புதிய பொதுக்குழுவுக்காவது முன்னானி நடிகைகள் வருவார்கள் என பார்த்தால் அவர்களும் ஆப்சென்ட் தான்.

ஆனால் நடிகை ஹன்ஷிகா வராவிட்டாலும் பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவர்க்கும் உணவுக்கான செலவை தான் ஏற்றுக்கொண்டு அனைவர் மனதிலும் நின்றுவிட்டார்.. இது இப்படி இருக்க அன்றைய தினமே நடந்த தெறி’ ஆடியோ ரிலீசில் படத்தின் நாயகிகளில் எமி ஜாக்சன் வருகை தர, இன்னொரு நாயகியான சமந்தா விழாவில் கலந்து கொள்ளாமல் எஸ்கேப் ஆனார்.. ஒருவேளை நயன்தாரா லெவலுக்கு வளர்ந்துட்டாரோ..!