ஸ்ருதிஹாசன் பாணியில் ஜூட் விட்ட கீர்த்தி சுரேஷ்..!

ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்தில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என அறிவிப்பு செய்தார்கள்.. ஏற்கனவே நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் சொதப்புகிறார் என விஷயம் கசிந்ததால் அவரை நீக்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது..

ஆனால் உண்மை அதுவல்ல என்றும் கீர்த்திதான் நைசாக இந்தப்படத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.. முன்பு இக்கரைக்கு அக்கறை பஸ்ஸை என்கிற பாணியில் கார்த்தி நடிக்கும் படத்தில் முதலில் ஒப்பந்தமான ஸ்ருதிஹாசன், பின்னர் அஜித் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் அக்ரிமேன்ட்டை கூட மதிக்காமல் ஜூட் விட்டார் இல்லையா..?

அதேபாணியைத்தான் இப்போது கீர்த்தி சுரேஷும் பின்பற்றியுள்ளார் என்றும்,. தனுஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு லேட்டாக வரவே, சற்றும் யோசிக்காத கீர்த்தி சுரேஷ் தனுஷ் படம் தான் என டிக் செய்து ‘கவலை வேண்டாம்’ படத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஜூட் விட்டுவிட்டார் என்றும் இப்போது செய்திகள் வெளிவந்துள்ளன. வளர்கின்ற நிலையில் இவர் இப்படி செய்திருப்பது அவரது பேரை டேமேஜ் பண்ணிவிடும் என அவரது அம்மா, முன்னாள் நடிகை மேனகா கூட சொல்லித்தராமல் போய்விட்டாரே..!