மாடர்ன் லவ் சென்னை ; விமர்சனம்

பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா உள்பட 6 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தலாஜி தான் மாடர்ன் லவ் சென்னை. நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் படம் தான் ‘மாடர்ன் லவ் சென்னை’

மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த வெப் தொடர் மொத்தம் 6 அத்தியாயங்களை கொண்டது. இதில் ‘லாலா குண்டா பொம்மைகள்’ என்கிற முதல் அத்தியாயத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். அதேபோல் ‘இமைகள்’ என்கிற இரண்டாவது அத்தியாயத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார்.

‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ என்கிற மூன்றாவது அத்தியாயத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார். ‘மார்கழி’ என்கிற நான்காவது அத்தியாயத்தை அக்‌ஷய் சுந்தர் இயக்கி இருக்கிறார். ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்கிற நான்காவது அத்தியாயத்தை பாரதிராஜாவும், ‘நினைவோ ஒரு பறவை’ என்கிற ஐந்தாவது அத்தியாயத்தை தியாகராஜன் குமாரராஜாவும் இயக்கி உள்ளனர்.

இதில் முதல் மூன்று அத்தியாயத்திற்கு ஷான் ரோல்டன், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். எஞ்சியுள்ள மூன்று அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

முதல் பாகமான ‘லாலாகுண்டா பொம்மைகள்’ படத்தை ராஜூமுருகன் இயக்கியிருக்கிறார். ஷோபா எனும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண் சந்திக்கும் காதல் பிரச்னைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. காதல் மட்டுமின்றி, கருக்கலைப்பையும் சந்தித்திருக்கும் பெண்ணின் உடல் மற்றும் மனவலிகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவள் அடையும் இன்னொரு காதலால் அனைத்து வலிகளும் நீக்கமடையும் என ஒரு சாமியாடி சொல்ல, அதன்பிறகு பானிபூரி வியாபாரியான நாதுராம் உடன் ஷோபாவிற்கு மீண்டும் காதல் மலர்கிறது.

அந்த காதல் ஷோபாவை குணப்படுத்தியதா இல்லையா என்பதை ‘லாலகுண்டா பொம்மைகளின் மீதி கதை.

பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் ‘இமைகள்’, நித்யா மற்றும் தேவி ஆகிய இரு நடுத்தர வர்க்கத்தினருக்கு இடையிலான காதலின் மற்றொரு அம்சத்தைப் பேசுகிறது. கல்லூரியில் அவர்கள் காதலிக்கும்போது, தேவி நித்யாவிடம் தனக்கு கண் பார்வைக் குறைபாடு இருப்பதாகவும், காலப்போக்கில் கண் பார்வையை மொத்தமாக இழக்க நேரிடும் என்றும் கூறுகிறாள். கண்பார்வை இழப்பைச் சமாளித்து தன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய தேவியின் போராட்டங்களோடு, திருமணத்தின் நுணுக்கங்களையும் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியிருக்கிறார். ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரதான கதாபாத்திரமான மல்லிகாவின் பதின் பருவ காதல் தேடல்களைச் சுற்றியே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களால் பாதிக்கப்படும் நாயகியின் காதல் குறித்த எண்ணம், பல தருணங்களில் தோல்வியையே காண்கிறது.

‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ படத்தில் பிரதான கதாபாத்திரங்களான ரவி, ரோகிணி ஆகிய இருவரும் மெட்ரோவில் சந்தித்து, பிறகு காதலிக்க தொடங்குகிறார்கள்.

ஒரு கட்டத்தில், ரவி தனது மனைவி ரேவதியிடம் தனது புதிய காதலைப் பற்றிச் சொல்ல முடிவு செய்கிறார். அதன் பிறகான அவர்களின் உரையாடலைச் சுற்றியே முழுப் படமும் நகர்கிறது.

இன்றைய உலகில் ‘நான்’ என்பதில் இருந்து ‘நமக்கு’ என்பதை நோக்கி நகரும் கதையில், விஜயலட்சுமியும், ரம்யா நம்பீசனும் வசீகரிக்கிறார்கள். இயக்குநர் பாரதிராஜா நவீன உறவுகளை காலத்திற்கு ஏற்ப படமாக்கியிருக்கிறார்.